விளையாட்டு ஒதுக்கீட்டில் படிக்க வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
பூவிருந்தவல்லி: சவீதா பல்கலையில், விளையாட்டு ஒதுக்கீட்டில் படிக்க மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சவீதா பல்கலை, சவீதா பொறியியல் கல்லுாரியில், விளையாட்டு ஒதுக்கீட்டில் படிக்க, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு, தண்டலத்தில் உள்ள, அதன் வளாகத்தில், ஜூன் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதில், வாலிபால், சதுரங்கம், பூப்பந்து, டென்னிஸ், கபடி, இறகுபந்து, மேஜைபந்து, தடகளம், ஹேண்ட்பால், கோ-கோ ஆகியவற்றில் இருபாலரும் பங்கேற்கலாம். கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் பிரிவுகளில் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். எறிபந்து பிரிவில், மாணவியர் மட்டுமே பங்கேற்கலாம். மேலும், விவரங்கள் அறிய, 98655 86221, 86084 16919 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.