உள்ளூர் செய்திகள்

அருப்புக்கோட்டை பள்ளியில் ஒரு மாணவிக்கு இரு ஆசிரியர்கள்

அருப்புக்கோட்டை அருகே சேது ராஜபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஒரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள் உள்ளனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சேதுராஜபுரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கடந்த 1966ல் துவங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் படித்து வந்தனர். நாளடைவில், இப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து போனது. கடந்தாண்டு 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பள்ளியில் இருந்தனர். இந்தாண்டு 1 மாணவி மட்டும் ஐந்தாம் வகுப்பில் உள்ளார். இந்த மாணவியை பயிற்றுவிக்க 2 ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளியில் கழிப்பறை, மைதானம், டி.வி., உட்பட பல வசதிகள் உள்ளன, இருப்பினும் மாணவர்கள் இல்லை. 1 மாணவிக்காக 2 ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு இது வரை எந்த மாணவர்களும் பள்ளியில் சேரவில்லை. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கருப்பசாமி, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கிராம கல்வி குழு கூட்டம் கூட்டப்பட்டு, பள்ளியின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. ஊர் மக்கள் பள்ளியை மூட வேண்டாம். நாங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைக்கிறோம். என்றனர். இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்