பீகாரில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு
பாட்னா: பீகாரில் அண்மையில் வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தாங்கள் படித்த பாடங்கள் குறித்து சரிவர தெரியவில்லை. இதனையடுத்து பிளஸ் 2 தேர்வில் முக்கியப் பாடங்களில் முதலிடம் பிடித்த 14 மாணவர்களுக்கு நேற்று மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. மனஅழுத்தம் காரணமாக ஒருவர் தேர்வு எழுத வரவில்லை. மற்ற 13 பேரும் மறுதேர்வு எழுதினர்.