உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் இடமாறுதல் கவுன்சிலிங்

சென்னை: ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் முதல்வர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்களுக்கான மாறுதல் கவுன்சிலிங், ஜூலை 25ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதுகுறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 30 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும், ஒன்பது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் செயல்படுகின்றன. இங்கு பணிபுரியும் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் இளநிலை விரிவுரையாளர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு, சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பதிவு நிலையத்தில் ஜூலை 25ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. மாறுதல் கோரி, ஒன்பது மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களும், 23 முதுநிலை விரிவுரையாளர்களும், 49 விரிவுரையாளர்களும் விண்ணப்பித்துள்ளனர். காலிப் பணியிட விவரங்கள் www.pallikalvi.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்