உள்ளூர் செய்திகள்

எஸ்.ஐ., தேர்வு கல்வித்தகுதி: அறிவியல் மாணவர்கள் குழப்பம்

பழநி: தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் சமீபத்தில் கைரேகை பதிவு எஸ்.ஐ., பணிகளுக்கான 202 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க செப்.,28 கடைசிநாள். கல்வித்தகுதியாக அறிவியல் பாடத்தில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பி.எஸ்சி., பாடத்தில் எந்த பிரிவை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில், &'&'அறிவியல் பட்டதாரி என தெளிவில்லாமல் கல்வித்தகுதியை அறிவித்துள்ளனர். இதனால் பி.எஸ்சி., அக்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.இ., படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும்,&'&' என்றார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்