உள்ளூர் செய்திகள்

குறைந்த கட்டணத்தில் இளநிலை படிப்புகள்: துணைவேந்தர் திருவாசகம்

அவர், மேலும் கூறியதாவது: உயர் கல்வியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. உயர்கல்வி, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே, இப்பல்கலையின் முதல் கடமை. அதை நிறைவேற்ற தமிழக அரசு, பல்கலை மானிய குழு, தேசிய அறிவுசார் பல்கலையுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இந்தியாவிலேயே முதன் முறையாக பாரதியார் பல்கலையில் 1,600 மாணவ, மாணயவியர்கள் இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயின்று வருகின்றனர். அத்திட்டம் சென்னை பல்கலையிலும் அறிமுகப்படுத்தப்படும். கல்விக்கு, ஏழ்மை தடையாக இருக்க கூடாது. சென்னை பல்கலையில் திறமையான பேராசிரியர்கள் உள்ளனர். அவர்களின் ஒத்துழைப்புடன் ஒரு புதிய மாறுபட்ட கல்வித் திட்டங்களை செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அடிப்படை அறிவியல் (பேசிக் சயின்ஸ்) பற்றிய சிந்தனை, ஆராய்ச்சி நம்மவர்களிடம் இல்லாமல் பின்தங்கி உள்ளோம். இக்காரணங்களால் தான் நோபல் பரிசு பெற முடியவில்லை. இதை போக்க அடிப்படை அறிவியல் என்ற பாடப் பிரிவை தனியாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அப்பிரிவின் மூலம் தேர்வுகள், ஆராய்ச்சிகள் நடைபெறும். இது மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும். ஆராய்ச்சி என்பது பல்கலை அளவில் மட்டும் இருக்கிறது. அதை கல்லூரி அளவில் கொண்டு செல்ல உள்ளோம். கல்லூரிகளில் இளநிலை பட்டதாரிகளை ஊக்கப்படுத்த, அடிப்படை அறிவியல் பாடப்பிரிவு கட்டாயமாக்கப்பட உள்ளது. சென்னை பல்கலையில் நீண்ட நாட்களாக உள்ள குறைகள் களையப்படும். மாணவ, மாணவியரின் குறைகளை களைய விசி கிரீன் பாக்ஸ் என்ற புதிய மெயில் முகவரி துவக்கப்பட உள்ளது. அதன் மூலம் மாணவர்களின் கேள்விகளுக்கு அன்றாடம் பதில் அளிக்கப்படும். சென்னை பல்கலையில் குறைந்த கட்டணத்தில் இளநிலை பட்டப்படிப்பு, ஆட்சிமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் விரைவில் கொண்டு வரப்படும். இவ்வாறு திருவாசகம் தெரிவித்தார். பல்கலை பதிவாளர் (பொறுப்பு) துரைசாமி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்