உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவர்களின் உரிமை: முதல்வர் இ.பி.எஸ்., பெருமிதம்

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ பட்டப் படிப்பில் வழங்கப்பட்டு வந்த, உள்ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, உரிமையை நிலை நிறுத்தியுள்ளோம் என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில், மாநிலத்திற்கான, 50 சதவீத இடங்களில் உள்ஒதுக்கீடாக, 50 சதவீத இடங்களை, தமிழக அரசில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வழங்கும் நடைமுறை, பல காலமாக, தமிழகத்தில் இருந்தது.இதை பாதிக்கும் வகையில், இந்திய மருத்துவ குழுமம், முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்குமுறைகளை வெளியிட்டது.இதை எதிர்த்து, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆஜராக, தமிழக அரசு, மூத்த வழக்கறிஞர்களை நியமித்தது.&'முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில், தமிழகத்தில் உள்ள உள்ஒதுக்கீட்டு முறையே தொடர வேண்டும்&' என, ஆணித்தரமாக வாதாடப்பட்டது.இவ்வழக்கில், &'மாநில அரசுகள், உள்ஒதுக்கீடு வழங்குவது, முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்குமுறைகளுக்கு எதிரானது அல்ல; அரசு மருத்துவர்களுக்கு, மாநில அரசுகள் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில், உள்ஒதுக்கீடு வழங்கலாம்&' என, நேற்று முன்தினம், உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் வழங்கப்பட்டு வந்த, உள் ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, உரிமையை நிலைநிறுத்தியுள்ளது, ஜெ., அரசு. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்