உள்ளூர் செய்திகள்

காப்பக குழந்தைகளுக்கு கேள்விக்குறியான ஆன்லைன் வழி கல்வி

பெற்றோரால் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கே, ஆன்லைன் வழி கல்வி எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில், 54 அரசு, தனியார் காப்பகங்கள் உள்ளன. இங்கு, கடந்த மார்ச் வரை, ஆயிரத்து 757 குழந்தைகள் தங்கி, அடிப்படை கல்வி பெற்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பெற்றோர், பாதுகாவலர் விருப்பம் தெரிவித்ததன் பேரில், ஆயிரத்து 314 பேர், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 443 பேர் மட்டுமே, காப்பகத்தில் உள்ளனர். வீட்டிற்கு சென்ற குழந்தைகள், ஏற்கனவே படித்த பள்ளிகளில், அடுத்த வகுப்புக்கு செல்வதால், சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஆனால், இக்குழந்தைகளுக்கான புத்தகம், புத்தகப்பை உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள், அந்தந்த பள்ளிகளிலே உள்ளன. இவர்கள் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்ற, முறையான கண்காணிப்பும் இல்லை. கிராமப்புறங்களில் விவசாய, தோட்ட வேலைகளுக்கு இக்குழந்தைகள் அழைத்து செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாவலர் பொறுப்பில் உள்ள குழந்தைகள் மீண்டும், காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, கல்வியை தொடர்வார்களா என்பதும் கேள்விக்குறியே.சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், &'பெற்றோர், பாதுகாவலர் பொறுப்பில், குடும்ப சூழலில் தான் குழந்தைகள் வளர வேண்டும். ஆனால், அச்சூழல் இல்லாத காரணத்தால், காப்பகத்திற்கு வந்த குழந்தைகள், ஊரடங்கு காரணமாக மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வீடுகளில் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கண்காணிப்பு இல்லை. மீண்டும் இக்குழந்தைகள், இடைநிற்க வாய்ப்புள்ளது. இவர்களின் நிலை குறித்து, ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். தற்போது காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, பள்ளி திறக்கும் வரை, வழிநடத்த நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்&' என்றனர். கிராமப்புறங்களில் விவசாய, தோட்ட வேலைகளுக்கு இக்குழந்தைகள் அழைத்து செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாவலர் பொறுப்பில் உள்ள குழந்தைகள் மீண்டும், காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, கல்வியை தொடர்வார்களா என்பதும் கேள்விக்குறியே.&'சேர்க்கை உறுதி&'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் கூறுகையில், &'&'கோவையில் மொத்தமுள்ள 54 காப்பகங்களில், 32 காப்பகங்களில் மட்டுமே, 443 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்வி தொலைக்காட்சி சேனல், லேப்டாப், மொபைல் போன் மூலம், இவர்கள் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தைகள், அடுத்த வகுப்புக்கு செல்ல, சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர், பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளனர். பெற்றோரால் பராமரிக்கப்படும் பட்சத்தில், குழந்தைகளை காப்பகத்தில் தங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை,&'&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்