உள்ளூர் செய்திகள்

தமிழ் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

மதுரை: மத்திய தொல்லியல் நிறுவன பட்டயப் படிப்பில் சேர, முதலில், தமிழை புறக்கணித்து கவனக்குறைவாக அறிவிப்பு வெளியிடக் காரணமான அதிகாரி மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சிவகங்கை, வேப்பன்குளத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:மத்திய தொல்லியல் துறையின் கீழ் உ.பி., மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் தொல்லியல்நிறுவனம் உள்ளது. இங்கு, தொல்லியல் முதுகலைப் பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியானது.இதில் தொல்லியல், மானிடவியல், சமஸ்கிருதம், பாலி, மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தகுதியில், தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என இணைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.மத்திய அரசு தரப்பில், &'தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா மொழிகளை இணைத்து அக்., 8ல் புதிய அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது&' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள் உத்தரவு அறிவு தளம், அரசியல் தளத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு மற்றும் இந்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலான பின், தமிழை தகுதியாக இணைத்து, அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. தமிழை புறக்கணித்து, கவனக்குறைவாக முதலில் அறிவிப்பு வெளியிட காரணமான பொறுப்பான அதிகாரி யார், அவர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, மத்திய கலாசாரத் துறை செயலர், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவன இயக்குனர் அக்., 28ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்