உள்ளூர் செய்திகள்

கர்நாடகா பள்ளிகள் மூன்று வார காலத்திற்கு விடுமுறை

பெங்களூரு: கொரோன தொற்று அச்சம் காரணமாக கர்நாடக மாநில பள்ளிகளுக்கு வரும் 12 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்றால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் மூலம் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இரு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு வரும் 12ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முன் கூட்டிய தசரா வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.முன்னதாக மாநில அரசு அக்.,3 முதல் 26 வரை திட்டமிடப்பட்ட விடுமுறையை ரத்து செய்திருந்தது. இதற்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். கொரோனா கால கட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். அரசு இந்த கல்வி ஆண்டின் இடைக்கால விடுப்பை ரத்து செய்து ஆசிரியர்களை மோசமாக நடத்தி வருகிறது. எந்தஅடிப்படையில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது. அரசு எதை அடைய முயற்சிக்கிறது. என டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்