கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் ஏன்?
சென்னை: &'கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிடு வதில் தாமதம் ஏன்?&' என, மத்திய அரசுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழர் நாகரீகத்தின் தொன்மையை, உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் கீழடி அகழாய்வு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அவற்றின் முடிவுகள் குறித்து, அறிக்கைகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதம், மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.கீழடியில் நடத்தப்பட்ட, முதல் மூன்று கட்ட அகழாய்வுகளின் அறிக்கைகளை, இனியும் தாமதிக்காமல் விரைந்து வெளியிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஐந்தாம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை உடனடியாகவும், ஆறாம் கட்ட அகழாய்வின் அறிக்கையை அடுத்த சில மாதங்களிலும், வெளியிட தமிழக அரசின் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.