உள்ளூர் செய்திகள்

பல்கலை தேர்விற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பிற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கேரள மாநிலம், கோழிக்கோடு சூரஜ் பாஸ்கர் தாக்கல் செய்த மனு:மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வியில், 2016ல் பி.ஏ., - பொருளாதாரம் படிப்பில் சேர்ந்தேன். 2019ல் நடந்த இறுதி பருவ தேர்வில் பங்கேற்றேன். இதற்குரிய தேர்வு முடிவு வெளியாகவில்லை.கடந்த 2020 ஏப்ரலுக்குரிய பருவ தேர்வு அறிவிப்பை, ஆக., 21ல் பல்கலை வெளியிட்டது. அதில், &'ஏப்ரல் 2020 தேர்விற்கு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். &'இதற்கு முந்தைய தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அத்தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும். &'அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது. 2019 நவம்பர் தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டாம்&' என குறிப்பிடப்பட்டு உள்ளது.எங்களை போல் தேர்வு எழுதிய மாணவர்கள் வெற்றி பெற்றனரா, இல்லையா என இதுவரை தெரியவில்லை. எவ்வித காரணமும் இன்றி, 2020 ஏப்ரலுக்குரிய தேர்வு அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதம். இதில், விதிமீறல் உள்ளது. அந்த அறிவிப்பின் மீதான மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். எங்கள் தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து, தமிழக உயர்கல்வி துறை முதன்மை செயலர், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூலை 1க்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்