ஆன்லைன் கல்வி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.மகேந்திரன் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி பெறும் அடித்தட்டு மக்களுக்கு கடும் நிதி நெருக்கடி உள்ளது; அவர்களின் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.2020 - 21ம் ஆண்டுக்கான பாக்கி கட்டணத்தையும், பெற்றோரால் செலுத்த முடியவில்லை. எனவே, பள்ளிகளில் கட்டணப் பாக்கியை கோரக்கூடாது; ஆன்லைன் வகுப்புகளில் அனுமதிக்க வேண்டும் மாணவர்களின் திறமையை வளர்க்க, மாற்று வழி கண்டுபிடிக்க, நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, பள்ளி கல்வித் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.