எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு குறித்து முதல்வர் எடியூரப்பா விளக்கம்
பெங்களூரு: &'&'என்னிடம் ஆலோசனை நடத்தி, அனுமதி பெற்று தான் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கு நாள் குறிக்கப்பட்டது. தேவையின்றி குழப்பம் ஏற்படுத்துவது தவிர்க்கவும்,&'&' என, முதல்வர் எடியூரப்பா கூறினார்.எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, ஜூலை 19, 22 ஆகிய இரு நாட்கள் நடத்தப்படுமென, தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், தேர்வு தேதி அறிவித்திருப்பது தனக்கு தெரியாது என சுகாதார துறை அமைச்சர் சுதாகர், தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். முதல்வருக்கும் சுரேஷ்குமார் தெரிவிக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது.இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா வீட்டுக்கு, அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று காலை திடீரென சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.அதன் பின், முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு தேதி குறிப்புக்கு முன், என்னிடம் ஆலோசித்து, அனுமதி பெற்று தான் அறிவித்தார். மாணவர்கள் நலன் கருதி விரிவான ஆலோசனைக்கு பின்னரே தீர்மானம் எடுக்கப்பட்டது. அவர் சுயமாக முடிவு எடுக்கவில்லை என்பதை தெளிவாக கூறுகிறேன். தேவையின்றி குழப்பம் ஏற்படுத்துவது தவிர்க்கவும். இவ்வாறு அவர் கூறினார். இதன் பின், அமைச்சர் சுரேஷ்குமார் கூறுகையில், &'&'முதல்வரிடம் அனுமதி பெற்று, சுகாதார துறை ஆலோசனைப்படி தான் தேர்வுக்கு நாள் குறிக்கப்பட்டது. சுகாதார துறை கூடுதல் தலைமை செயலர் முன்னிலையில் தான் ஆலோசனை நடத்தி, விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டது, என்றார்.