உள்ளூர் செய்திகள்

தொலைநிலைக் கல்வி மைய மாணவர் சேர்க்கை துவக்கம்

பாரதிதாசன் பலக்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மைய மாணவர் சேர்க்கையை, அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையம் சார்பில் திட்டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., டிப்ளமோ படிப்புகளுக்கான 2021 - 22ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்று விண்ணப்பங்களை வழங்கி துவக்கி வைத்தார். மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் வரவேற்றார். பேராசிரியர் சண்முகம், அலுவலர்கள் சிந்துஜா, பானுப்ரியா, வினோரஞ்சனி, தமிழ் இலக்கியா, புஷ்கலா, லட்சுமி உடனிருந்தனர். மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்