உள்ளூர் செய்திகள்

உயர்கல்விக்கு உதவி கோரும் தஞ்சை பல்கலை. மாணவி

தஞ்சாவூர் வல்லத்தில் இருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பி.டெக். ஐ.டி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் மாணவ கனகவள்ளி. மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலும் தன்னை தன் பெற்றோர் படிக்க வைப்பதாகத் தெரிவித்த அவர், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.25 ஆயிரம் கேட்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு 23-8-2007ம் ஆண்டு விண்ணப்பித்ததாகக் கூறியுள்ளார். நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியாளர் ஆகியோரும் தனக்கு கல்வி உதவித் தொகை வழங்க பரிந்துரை செய்தார்கள். கல்வி உதவித் தொகை பெற அனைத்துத் தகுதிகளும் இருந்தும் தனது பெயர் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. தனக்குப் பின்னால் புதிதாக விண்ணப்பித்தவர்கலுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்தும் தனக்கு கல்வி உதவித் தொகை வழங்காமல் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளது கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்