உள்ளூர் செய்திகள்

வசதி இல்லாத அரசு சித்தா கல்லூரிகளுக்கு கிடுக்கிப்பிடி!

இந்தியா முழுவதும் உள்ள ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவக் கல்லூரிகள் சிலவற்றில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாததால், மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும்படி மத்திய நலவாழ்வு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், 300 ஆயுர்வேத, சித்த, யுனானி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் மாணவர் சேர்க்கை நடக் கும். இது குறித்த விதிகளை 2003ல் மத்திய அரசு மாற்றியமைத்தது. அந்த விதிகளின்படி, 2006 க்குள் உள்நோயாளிகளுக்கு 100 படுக்கை வசதி, 40 சதவீத இடவசதி, மூலிகை சேகரிப்பு மையம், நூலகம், ஆசிரியர் மற்றும் நிர்வாக ஊழியர்கள் இவற்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த விதிகளை ஏற்று பூர்த்தி செய்து விட்டதாக, 123 கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுவிட்டன. அரசு கல்லூரிகளில் இதற்கான நடைமுறைகள் அதிகமாக இருப்பதால் ஒரு ஆண்டு கூடுதல் அவகாசம் வழங் கப்பட்டது. 16 அரசு ஆயுர்வேத கல் லூரிகள், 4 யுனானி கல்லூரிகள் இன்று வரை மேற் கண்ட உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யவில்லை. இது குறித்து, இந்திய மருத்துவ மத்திய கவுன் சில் துணைத் தலைவர் டாக்டர். ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறுகையில், கூடுதல் அவகாச காலத் துக்குள் கூட இந்த வசதிகளை சில கல்லூரிகள் பூர்த்தி செய்யவில்லை. சில விதிகள் தளர்த்தப் பட்டுள்ளன. இந்த நிலை வருந்துதற்கு உரியது என்றார். உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள ஆறு கல்லூரிகளிலும் மத்தியபிரதேசத்தில் ஆறு ஆயுர் வேத கல்லூரிகளில் ஐந்திலும் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்