உள்ளூர் செய்திகள்

மகளிர் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி மேலாண்மை கல்லூரி மற்றும் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் எச்.பி. நிறுவனத்தின் சார்பில் வெலைவாய்ப்பு முகாம் நடந்தது. எச்.பி. நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் சந்திரசேகர்,  கோபாலகிருஷ்ணன், பிரிண்ட்லி கார்வல்லோ உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட குழுவினர் மூன்று கல்லூரிகளுக்கும் சேர்த்து தங்கள் நிறுவனத்திற்கு பொறியாளர்களை தேர்வு செய்தனர். இறுதியாண்டு இளநிலை பொறியியல் மற்றும் எம்.சி.ஏ மாணவிகள் 519 பேர் முதல்கட்ட எழுத்து தேர்வுகளில் பங்கேற்றனர். இவர்களில் 221 மாணவிகள் இரண்டாம்; கட்ட தேர்வான நுண்ணறிவு கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத்தெர்வில் 20 மாணவிகள்இறுதியாக வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும்பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது. பணி நியமன உத்தரவுகளை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி மாணவிகளுக்கு வழங்கினார். பணி நியமனம் பெற்ற மாணவிகளை முதன்மை நிர்வாகி மேகநாதன், நிர்வாக அலுவலர் சொக்கலிங்கம்,  முதல்வர் (பொ) குருசாமி, வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் ஆகியோர் வழங்கினர். இம்மாணவிகளுக்கு ஆண்டு சம்பளம் ரூ. 3.25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்