உள்ளூர் செய்திகள்

உலக சுகாதார விழிப்புணர்வு மாணவர்கள் உலக சாதனை

ஆவடி அடுத்த கோவில்பதாகையில், உலக வாய் சுகாதார தினத்தையொட்டி, ஆவடி லயன்ஸ் கிளப் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நாசரேத் தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆறு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 2,586 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்கள் பிளாஸ்டிக் இருக்கையில் அமர்ந்து வாய் கழுவும் திரவம் கொண்டு 15 நொடிகள் வாய் கொப்பளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.இதற்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை, எம்.எல்.ஏ., நாசர், உலக சாதனை புத்தக இயக்குனர், லயன்ஸ் கிளப் தலைவர் மற்றும் நாசரேத் கல்லுாரி முதல்வர் ஆகியோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்