உள்ளூர் செய்திகள்

கொரோனா கால ஊக்க மதிப்பெண்: டாக்டர்கள் மனு

சென்னை: அரசு டாக்டர்கள் தேர்வில், கொரோனா காலத்தில் பணியாற்றிவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என அரசிடம் அனைத்து அரசு டாக்டர்களின் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டமைப்பினர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரிடம் அளித்துள்ள மனு:மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு தனி ஊதிய உயர்வு ஆணை வெளியிட வேண்டும். இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்திய டாக்டர்களுக்கான தேர்வில் கொரோனா கால டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும். கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்