மோதிலால் நேரு பாலிடெக்னிக்: மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
புதுச்சேரி: லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர் சேர்க்கை வரும் 24ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்லுாரி முதல்வர் நாககார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நடப்பு 2023 - 24 கல்வியாண்டில், மூன்று ஆண்டுகள் பட்டய படிப்பில் மாணவர் சேர்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது. இருப்பினும், சில பாடப்பிரிவுகளில் சில இடங்கள் எஞ்சியுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் நடந்தது. தொடர்ந்து, இரண்டாவது முறையாக மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் 24ம் தேதி வரை, கல்லுாரி முதல்வர் அலுவலகத்தை, அலுவலக நேரங்களில் நேரில் அணுகி சேரலாம். வரும்போது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ஜதி சான்றிதழ் உள்ளிட்ட அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.