உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி பள்ளி சுவர்களில் திருநங்கையர் தீட்டிய ஓவியம்

திருவல்லிக்கேணி: மாநகராட்சி பள்ளிகளில் திருநங்கையர் இணைந்து, விழிப்புணர்வு ஓவியங்கள் தீட்டி வருகின்றனர்.பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட அரவாணி ஆர்ட், என்ற அரசு சாரா அமைப்பின் வாயிலாக, சுவர் ஓவியங்கள் வரைவதன் வாயிலாக திருநங்கையர் வருவாய்க்கு ஈட்டித் தரப்படுகிறது. சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் திருநங்கையர் கைவண்ணத்தில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதேபோல, 84 பள்ளிகளில், வகுப்பறை மற்றும் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்துள்ளனர். தற்போது, தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்டம் வாயிலாக, சுவர் ஓவியங்கள் வரையும் வாய்ப்பை இந்த அமைப்பு பெற்றுள்ளது. திருநங்கையர் ஸ்மிதா, அவிமுக்தா, வார்சா, காஞ்சனா மற்றும் தன்னார்வலர்கள் பூதேஸ்வரன், யாழ் ஆகியோரின் கூட்டு முயற்சியில், திருவல்லிக்கேணி, பெசன்ட் ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி லேடி வில்லிங்டன் உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்படுகிறது.இதுகுறித்து ஸ்மிதா, அவிமுக்தா ஆகியோர் கூறியதாவது:மாணவ, மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரைகிறோம். இதேபோல, வீடு, அலுவலகம், கட்டடங்களிலும் ஓவியம் தீட்டுகிறோம். இந்த முயற்சிகள் எங்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரும். நாங்கள் வருமானம் ஈட்டவும் வழிவகை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்