உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் பாதுகாப்பு சட்டம் இயற்ற அமைச்சரிடம் மனு

இக்குழு சார்பில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. குறிப்பாக பள்ளி சாராத பெற்றோர் அல்லாத சமூக விரோதிகளால் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. கடந்த காலங்களில் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருந்தது. அப்போது தி.மு.க. ஆட்சியில் மருத்துவ நிறுவனங்கள் மீதான வன்முறை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதேபோல் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசு உதவி பெறாத பள்ளிகள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்