உள்ளூர் செய்திகள்

கேரள பொறியாளர்கள் தயாரித்த ரோபோவுக்கு முதல் பரிசு

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், அகில இந்திய கவுன்சில் பார் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் சார்பில், உலக ரோபோடிக்ஸ் சாம்பியன்ஷிப் டெக்னோசியன்- 2023 போட்டி நடந்தது. இதில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட, 25 நாடுகளில் இருந்து, 5,000 பொறியாளர்கள் பங்கேற்றனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மிதுன், அகில், நிவேத், கமலேஸ்வரன் ஆகிய பொறியாளர்கள் இணைந்து இப்போட்டியில் பங்கேற்றனர். இவர்கள், மனித உருவ ரோபோவை தயாரித்துள்ளனர். உலகில் எந்த இடத்தில் இருக்கும் மருத்துவர்களையும் தொடர்பு கொண்டு, நோயாளியை பராமரிக்க செயற்கை நுண்ணறிவு உள்ள இந்த ரோபோவுக்கு, செவிலியர் லுாசி என பெயரிட்டனர். சிறு அறுவை சிகிச்சை செய்வதற்கான தொழில்நுட்பம் கொண்ட இந்த ரோபோவுக்கு, நொய்டாவில் நடந்த போட்டியில், சர்வதேச அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.இதுகுறித்து மிதுன் கூறியதாவது:கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் செவிலியர் பணிக்கு ரோபோ தயாரிப்பது குறித்து யோசித்தேன். ரோபோடிக்ஸ் பிரிவில் ஆர்வம் கொண்டதால், இதை சாத்தியமாக்க முடியும் என, கருதினேன். இதுகுறித்து நண்பர் அகிலிடம் கூறினேன். மனித உருவ ரோபோவுக்கான சாப்ட்வேர் பணிகளை நான் மேற்கொண்டேன். ஹார்டுவேர் பணிகளை அகில் மேம்கொண்டு வடிவமைத்தார். எலக்ட்ரிக்கல் ஒயரிங் பணியை நிவேதும், பராமரிப்பு பணியை கமலேஸ்வரனும் மேற்கொண்டனர். ரோபோவுக்கு, செவிலியர் லுாசி என பெயரிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்