உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களை சிலம்ப சாதனையாளர்களாக்க முயற்சி!

திருப்பூர்: தான் கற்ற கலையை, மாணவ சமுதாயத்தினருக்கு விதைக்க வேண்டும்; அதுவும், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தர வேண்டும் என்ற ஆவலில், சிலம்ப பயிற்சி வழங்கி வருகிறார்.திருப்பூர், கோல்டன் நகரில் வசிக்கும் கிருஷ்ணன், 35. முத்தமிழ் சிலம்பம் என்ற பெயரில், புது ராமகிருஷ்ணபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் நகர் எஸ்.கே.வி., மெட்ரிக்., பள்ளி, கோல்டன் நகர் மாநகராட்சி பள்ளி, சின்னசாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கி வருகிறார்.அவர் கூறியதாவது:என் தாத்தா, மாமாவிடம் இருந்து இந்த கலையை நான் கற்றேன்; இதில், பெரியளவில் சாதிக்க வேண்டும் என நினைத்தேன். வாய்ப்பு கைகூடவில்லை. கோவில் திருவிழா உள்ளிட்ட சில உள்ளூர் நிகழ்ச்சிகளில் மட்டுமே சிலம்பம் ஆடிக் கொண் டிருந்தேன். இருப்பினும் நான் பயின்ற கலையை, இளைய சமுதாயத்தினருக்கு இயன்றவரை கற்றுக் கொடுத்து வருகிறேன்.நடந்த முடிந்த முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் என்னிடம் சிலம்பம் பயின்ற மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்றிருக்கின்றனர். எனது பயிற்சியால், இதுவரை, 96 மாணவ, மாணவியர் சிலம்பம் கற்றுள்ளனர்; 14 பயிற்றுனர்கள் உருவாகியுள்ளனர். சிலம்பம் கற்பதன் வாயிலாக மனம் ஒருநிலைப்படும்; உடல் வலிமை பெறும். தற்போதைய சூழலில், சிலம்பம் பயில மாணவ, மாணவியர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.திருப்பூர் மாவட்ட மற்றும் மாநில சிலம்பாட்ட கழகத்தின் ஒத்துழைப்பு, உதவியுடன், என்னிடம் பயிற்சி பெறுவோரை மாநில, தேசிய அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க செய்து, அவர்களை சாதனை புரிய வைக்க வேண்டும் என்பதே, என் லட்சியம்.இவ்வாறு, அவர் கூறினார்.அரசுப்பள்ளி மாணவர்களை, சிலம்ப சாதனையாளர்களாக முனைப்பு காட்டும் கிருஷ்ணனின் பணி சிறக்கட்டும்!மாணவ, மாணவியர் ஆர்வம்காலப்போக்கில் தமிழரின் எத்தனையோ தற்காப்புக் கலைகள் காணாமல் போயிருந்தாலும் இன்றைக்கும் உலக அளவில் உயிர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டம். ஐந்தாயிரம் ஆண்டு பழம்பெருமை வாய்ந்தது சிலம்பக்கலை. தமிழக அரசு இதை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்திருக்கிறது. தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டையும் சேர்த்து அரசாணை வெளியிட்டது. இன்றைக்கு மாணவ, மாணவியர் இக்கலையை ஆர்வத்தோடு கற்றுக் கொள்கின்றனர்.எதிரிகள் தவிடுபொடிகம்பு எடுத்து சுழற்றும் போது உடலில் உள்ள நாடி, நரம்புகள், தசைகள் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச்சுற்றும்போது உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பு உருவாகிறது. வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். எதிரிகள் தவிடுபொடியாவர். வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், நெகிழ்தன்மை ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்