நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
கோவை: நல்லாசிரியர் விருது பெற்ற மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, மாநகராட்சி கமிஷனர் பாராட்டினார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், 390 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, சென்னையில் வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சி, 53வது வார்டுக்குட்பட்ட மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலியின், சீரிய கல்விப்பணியை போற்றும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் நேற்று, நல்லாசிரியர் விருதினை காண்பித்து பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்த்து பெற்றார். கல்விக்குழு தலைவர் மாலதி, மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன், பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.