ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் சோதனை
ஈரோடு: ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மாமனார் அறிவுடை நம்பி வீடு ஈரோடு மாவட்டம் அக்ரஹார வீதியில் உள்ளது. அங்கு இன்று(அக்.,12) ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன், 55. இவர் பள்ளி கல்வி துறை இயக்குனராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.