உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆபீசுக்கு மாணவர்களை சீருடையுடன் கூட்டிச்செல்ல தடை

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர் கூட்டம் நடக்கிறது. அது பள்ளி வேலை நாள். பல பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க செல்லும் போது, தங்கள் பிள்ளைகளை பள்ளி சீருடையுடன் அழைத்து செல்கின்றனர்.இதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்களும் உரிய அறிவுரை வழங்க வேண்டும். இனி, இதுபோன்ற நிகழ்வு நடந்தால், சம்பந்தப்பட்ட மாணவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கையால், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் குடும்ப பிரச்னைகளையும், பிள்ளைகளின் நிலையையும் கலெக்டரிடம் தெரிவித்து, மனு கொடுப்பது பெற்றோரின் உரிமை. சீருடையுடன் மனு கொடுக்க வருவதை கலெக்டர்களே அனுமதிக்கும் போது, பள்ளி கல்வி அதிகாரிகள் தடை விதிப்பது ஏற்க முடியாதது என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்