மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., சீட் வழங்க ஐகோர்ட் உத்தரவு
புதுச்சேரி: காரைக்காலை சேர்ந்த மாணவி ஒருவர், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து படிக்க, முன்னாள் படைவீரர்கள் பிரிவில் விண்ணப்பித்தார். காரைக்கால் பிராந்தியத்தில் இருந்து, இவர் ஒருவர் மட்டுமே முன்னாள் படைவீரர்கள் பிரிவில் விண்ணப்பித்திருந்தார். இருந்தும் மாணவிக்கு சீட் வழங்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. மாணவி தரப்பில் வழக்கறிஞர் பிரியாரவி ஆஜரானார்.வழக்கை விசாரணை செய்த நீதிபதி அனிதாசுமத், மாணவிக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சீட் வழங்கி உடனடியாக வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.