கல்பாக்கம் அணு ஆராய்ச்சி இயக்குனருக்கு தேசிய விருது
இதுகுறித்து, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய பிரதேச அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் கல்பாக்கம் இந்நதிரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரும், விஞ்ஞானியுமான பல்தேவ் ராஜுக்கு, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அறிவியலில், அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, 2007ம் ஆண்டிற்கான பண்டிட் ஜவகர்லால் நேரு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும், அணு அறிவியல் மற்றும் பொறியியல் துறையில், அவர் செய்து வரும் ஆக்கப்பூர்வமான பணிகளைப் பாராட்டி சர்வதேச அணு ஆராய்ச்சி அகடமி (ஐ.என்.ஈ.ஏ.,) உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அகடமியில் உலகளவில் 100 உறுப்பினர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.