உள்ளூர் செய்திகள்

மாணவர் காவல் படையினர் காவல் நிலையத்தில் விசிட்

திருப்போரூர்: திருப்போரூர் கிரிவலப்பாதையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில், 8ம் வகுப்பு படித்துவரும், மாணவர் காவல் படையைச் சேர்ந்த மாணவியர், நேற்று, திருப்போரூர் காவல் நிலையம் சென்றனர். பள்ளி நிர்வாக அனுமதியுடன் ஆசிரியர்கள் மாணவியரை அழைத்து சென்றனர்.காவல் நிலையம் வந்த மாணவியரை போலீசார் வரவேற்றனர். அங்கு நிர்வாக மற்றும் காவலர்களின் பணிகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும், போலீசார், மாணவியருக்கு சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் உட்பட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினர்.வாகனங்கள் செல்வதை முறைப்படுத்துதல், இருசக்கர வாகனங்களை பாதுகாப்பாக இயக்க தலைகவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து, மாணவியர், பேரணியாக திருப்போரூர் ஓ.எம்.ஆர்., செங்கல்பட்டு சாலை வழியாக பள்ளிக்கு வந்தடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்