உள்ளூர் செய்திகள்

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: சென்னையில் இன்று (நவ.,25) அதிகாலை முதல் கனமழை கொட்டியது வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில். கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருவதால் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் மேலும் அறிவித்துள்ளது.27ல் உருவாகிறது புதிய காற்றழுத்தம்அந்தமான் கடலின் தெற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில், வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்க கடலின் தென் கிழக்கு பகுதிகளில், 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.இதன் நகர்வு தொடர்ந்து கண்காணித்து அறிவிக்கப்படும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில்இன்று கன மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, குன்னுாரில், 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், வரும், 28ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். அந்தமான் கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள்வரும், 27, 28ம் தேதிகளில்,மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என,சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்