உள்ளூர் செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்தக்கோரி மனு

சென்னை: யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்று உள்ளன.இதனால், மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. வேலைவாய்ப்பில் சம உரிமை மறுக்கப்படுகிறது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் 8 வது அட்டவணை போல் அனைத்து மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்