உள்ளூர் செய்திகள்

புதிய கன்னட பள்ளி கட்ட மராத்தியர்கள் எதிர்ப்பு

பெலகாவி: பெலகாவி அருகே, புதிதாக கன்னட பள்ளி கட்ட எதிர்ப்பு தெரிவித்து, மராத்தியர்கள் போராட்டம் நடத்தினர்.மஹாராஷ்டிரா - கர்நாடகா மாநில எல்லைகளில், பெலகாவி மாவட்டம் உள்ளது. இங்கு மராத்தி மொழி பேசும், மக்கள் கணிசமாக வசிப்பதால் பெலகாவியை, மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால் விட்டுக்கொடுக்க கர்நாடகா மறுக்கிறது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையில், பல ஆண்டுகளாக பெலகாவியை வைத்து பிரச்னை உள்ளது.இந்நிலையில் நிப்பானி தாலுகா, கரடகா கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமையான, அரசு கன்னட பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டடம் சிதிலமடைந்து இருப்பதால், பள்ளியை முழுதுமாக இடித்து, புதிதாக கட்ட கல்வித்துறை அனுமதி அளித்தது. புதிய பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.இதுபற்றி அறிந்த மராத்தி மொழி பேசும் மக்கள் அங்கு சென்று, பள்ளி கட்ட எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினர். அங்கு சென்ற நிப்பானி போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம், பேச்சு நடத்தி அனுப்பினர். மராத்தியர்கள் எதிர்ப்புக்கு பயந்து, பள்ளி கட்டுவதை எக்காரணம் கொண்டும், நிறுத்த கூடாது என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்