பள்ளி அருகில் குட்கா விற்ற கடைக்கு சீல்
காங்கேயம்: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடக்கிறதா என்று, காங்கேயம் பகுதியில் பள்ளி அருகில் உள்ள கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லலிதாம்பிகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் தேவகி, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வித்யா, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அகிலாண்டபுரம் பள்ளி அருகில், புகையிலை பொருள் விற்ற ஒரு கடைக்கு சீல் வைத்தனர்.இதேபோல் வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்ட், பள்ளி அருகில் உள்ள கடைகளில், மாவட்ட நலக்கல்வியாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் கதிரவன், புகையிலை தடுப்பு பிரிவு பிரவீன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நான்கு கடைகளில் சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.