கல்வி கடனை கட்டாவிட்டால் ஏதேனும் பாதிப்பு வருமா?
நிச்சயமாக, கடன் வாங்கியவருக்கு மட்டுமல்ல; அவருக்கு உத்தரவாத கையெழுத்து போட்டவருக்கும் பாதிப்பு வரும். தொடர்ச்சியாக நோட்டீஸ் வரும். அப்படியும் பதில் அளிக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் கடன் வாங்கியவர், டிபால்டராக அறிவிக்கப்படுவார்.கிரெடிட் ஸ்கோர் அமைப்புகளுக்கு இந்த விபரம் கொடுக்கப்படும். எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு அந்த நபரால் வேறு கடன் வாங்கவே முடியாது. இதே நிலை தான் உத்தரவாத கையெழுத்து போட்டவருக்கும் ஏற்படும்.ஒரு கட்டத்தில், இந்த வழக்கு கடன் வசூல் தீர்ப்பாயத்துக்குப் போகும். அங்கேயிருந்து, பறிமுதல் உத்தரவை பெற்று, டிபால்டரிடம் இருந்து பணத்தை வசூல் செய்யும் முயற்சியில் வங்கி இறங்கிவிடும். இந்த நடவடிக்கையெல்லாம், கடன் வாங்கியவர் எதிர்காலத்தின் மீதே ஒரு கரும்புள்ளியைக் குத்திவிடும்.கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள். கல்விக் கடனை திருப்பிச் செலுத்தினால், இன்னும் நான்கு தேவையுள்ள மாணவர்கள் பயன்பெறுவர். வங்கியும் துணிந்து கல்விக் கடன் கொடுக்க முன்வரும். கல்விக் கடனைக் கட்டாததன் வாயிலாக, மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை மட்டுமல்ல, இதர மாணவர்களின் வாய்ப்பையும் பறிக்கின்றனர்.