உள்ளூர் செய்திகள்

தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்று பெற வாய்ப்பு

சிவகங்கை: கடந்த 2019 முதல் 2021 வரை பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், மதிப்பெண் சான்றினை ஜன.,31க்குள் பெற்றுக்கொள்ளலாம், என அரசு தேர்வுகள்உதவி இயக்குனர் தனலட்சுமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சிவகங்கை மாவட்டத்தில் தனித்தேர்வு மையங்கள் மூலம் 2019 மார்ச் முதல் 2021 செப்., வரை 6 பருவங்களில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வினை தனித்தேர்வர்களாக எழுதியவர்கள், அசல் மதிப்பெண் சான்றுகளை அந்தந்த தேர்வு மையங்களில் இது வரை பெறாமல் உள்ளனர்.இது போன்று மதிப்பெண் சான்றுகளை பெறாத தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள், சிவகங்கை மருதுபாண்டியர் நகரில்அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.இச்சான்றுகளை தனித்தேர்வர்கள் நேரடியாக வந்து 2024 ஜன.,31க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். நேரில் தொடர்பு கொண்டோ அல்லது ரூ.50 மதிப்புள்ள அஞ்சல்வில்லைகள் ஒட்டிய சுய முகவரி கவருடன் தனிதேர்வரின் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம், தேர்வு நுழைவு சீட்டு நகல் இணைத்து உரிய மதிப்பெண் சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.ஜன.,31க்கு பின் அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அசல் மதிப்பெண் சான்றுகள் அனுப்பி வைக்கப்படும். தனித்தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அசல் மதிப்பெண் சான்றுகளை விரைந்து பெற்று செல்லலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்