உள்ளூர் செய்திகள்

இந்தியாவை பின்பற்றி யு.பி.ஐ., சேவையை துவக்கியது பிரான்ஸ்

பாரிஸ்: இந்தியாவை பின்பற்றி பிரான்ஸ் தனது நாட்டில் யு.பி.ஐ., பண பரிவர்த்தனையை முறையை துவக்கி வைத்தது.எளிதாக பணம் பெறுவதற்கு, செலுத்துவதற்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. பல்வேறு வங்கி கணக்குகளை ஒரே செயலி மூலம் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த இயலுமென்பதால், யு.பி.ஐ. முறை வெற்றிகரமாக சென்று சேர்ந்துள்ளது.கடந்த 26-ம் தேதி குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியா பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மக்ரோன், பிரதமர் மோடி இருவரும் ராஜஸ்தானில் கடைவீதியில் க்யூஆர் கோடுமுறையும் , யு.பி.ஐ. பண பரிவர்த்தனை முறையும் பிரான்ஸ் அதிபருக்கு விளக்கினார்.இதை அப்படியே பிரான்ஸ் நாடும் பயன்படுத்த துவங்கியுள்ளது. இதற்கான துவக்க விழா பாரிஸ் நகரில் இந்திய தூதரகத்தில் நடந்ததுமுதற்கட்டமாக ஈபிள் கோபுரம் பகுதியில் யு.பி.ஐ., சேவை துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்