உள்ளூர் செய்திகள்

ஜே.இ.இ., முதன்மை தேர்வு: நெல்லை மாணவர் முதலிடம்

சென்னை: ஜே.இ.இ., முதன்மை தேர்வில் நெல்லை மாணவர் 300க்கு 300 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரியில் பொறியியல் படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படுவது ஜே.இ.இ. எனப்படும். கூட்டு நுழைவு தேர்வு. தேர்விற்கான மதிப்பெண் 300 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் இந்ததேர்வை 11 லட்சம் பேர் எழுதினர். இந்த ஆண்டிற்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு 13ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் 23 மாணவர்கள் 300க்கு 300 மார்க்குகள் எடுத்துள்ளனர். இவர்களில் 5க்கும் மேற்பட்டவர்கள் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்நெல்லை மாணவர் முதலிடம்இத்தேர்வை நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் என்ற மாணவரும் எழுதினார். தேர்வு முடிவில் முதலிடம் பெற்றுள்ள 23 பேர்களில் மாணவர் பிரதீஷ்-ம் 300க்கு 300 மார்க்குகள் எடுத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.மாணவர் சாதனையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வாழ்த்தி உள்ளார். இது குறித்து அவர் விடுத்து உள்ள செய்தியில் சாதனை புரிந்துள்ள மாணவர் முகந்த் பிரதீஷ், அவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்