உருது மொழியில் ராம்லீலா; டில்லி அரசு நடத்துகிறது
புதுடில்லி: டில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழிகள் துறை சார்பில், உருது பாரம்பரியத் திருவிழா நாளை மறுநாள் துவங்குகிறது. இதில், முக்கிய நிகழ்வாக உருது மொழியில் ராம்லீலா நிகழ்ச்சி 24ம் தேதி நடத்தப்படுகிறது.இதுகுறித்து, டில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:டில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழிகள் துறை சார்பில், சுந்தர் நர்சரியில் உருது பாரம்பரிய திருவிழா நாளை மறுநாள் துவங்குகிறது. தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இதில், முக்கிய நிகழ்வாக வரும் 24ம் தேதி, உருது மொழியில் ராம்லீலா நாடகம் நடத்தப்படுகிறது. ஸ்ரீ ஷ்ரத்தா ராம்லீலா நாடகக் குழுவினர் தஸ்தான் -ராமாயணம்: உருதுவில் ராம்லீலா என்ற நாடககத்தை நடத்துகின்றனர்.ராவணனை வென்ற ராமரின் புராணக் கதையை உருது மொழியில் தனித்துவமான திருப்பத்துடன் இந்த நாடகத்தில் விவரிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கான கஜல் ஓதுதல், கவிதைப் போட்டிகள் மற்றும் விவாதம் ஆகியவையும் நடத்தப்படுகிறது.டில்லி தவிர மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உட்பட பல்வேறு மாநகரங்களில் இந்த நிகழ்ச்சி வரும் 22 முதல் 25 வரை இந்த விழா நடத்தப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.