உள்ளூர் செய்திகள்

கழிவுநீரால் பொதுமக்கள் தவிப்பு; கலெக்டரிடம் மாணவர் குமுறல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுநீர் பல இடங்களில் ஆறாக பாய்கிறது. சுகாதாரக்கேடால் முதியவர்கள், குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அபாயம் உள்ளதால் உடனடியாக சரி செய்யவலியுறுத்தி மூன்றாம் வகுப்பு மாணவர் கா.தருண்ராம், கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் முறையிட்டார்.ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமிநகர் காளிதாசன்மகன் தருண்ராம் 8. நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார்.அவர் கலெக்டரிடம் அளித்த மனு:ராமநாதபுரத்தில் பள்ளி, மருத்துவமனை, பஸ்நிறுத்தங்கள், கோயில் என எங்கு பார்த்தாலும் பாதாள சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. நீங்கள்(கலெக்டர்) தினமும் உங்கள் வீட்டிற்கு செல்லும்வழியில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பஸ்ஸ்டாப் அருகில்பல நாட்களாக கழிவுநீர் ஓடுகிறது. அங்கு ஓட்டல்களும் நிறைய உள்ளன. சுகாதாரக்கேடால் நோய்தொற்று அபாயத்தில் பொதுமக்கள் தவிக்கின்றனர்.இவ்விஷயத்தில் தலையிட்டு பொதுமக்களின் நலன் கருதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கழிவுநீர் அகற்றப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மாணவரிடம் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்