வீரணம்பாளையம் அரசுப்பள்ளி மத்திய அரசு தேர்வில் சாதனை
பெருந்துறை: தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு (என்.எம்.எம்.எஸ்., தேர்வு), சமீபத்தில் நடந்தது. இதில் வழக்கம்போல் பெருந்துறை யூனியன் வீரணம்பாளையம் அரசு நடுநிலை பள்ளி மாணவர்கள், இந்தாண்டும் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.இப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர், 30 பேர் தேர்வில் பங்கேற்றனர். இதில், 21 பேர் தேர்ச்சி பெற்றனர். இது ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. 11வது ஆண்டாக நடப்பாண்டும் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர், ௨௧ பேருக்கும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி ஊக்க தொகையாக மாதம் தோறும், ௧,௦௦௦ ரூபாய் வழங்கப்படும்.இதேபோல் பெருந்துறை, சுண்டகாம்பாளையம் அரசுப்பள்ளி மாணவி மொழியரசி, என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.