உள்ளூர் செய்திகள்

மனித உரிமைகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்த மாணவர்கள்

பரமக்குடி: பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில்சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை மாவட்ட குற்றப்பிரிவு பொறுப்பு டி.எஸ்.பி., விஜயகுமார் துவக்கி வைத்தார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., பால்பாண்டி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார்.தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சமூக நீதி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சந்தை, பஸ் ஸ்டாண்ட், ஆர்ச் வழியாக ஊர்வலம் ஆரிய வைசிய மேல்நிலைப் பள்ளியை அடைந்தது.அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.அப்போது தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன், என்று உறுதிமொழி எடுத்தனர்.இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார், வியாபாரிகள்சங்கம், ரோட்டரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் முருகலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்