சஸ்பெண்ட் முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு
சேலம்: சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி, 52. இவர் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் உள்ள சவுடேஸ்வரி கல்லுாரி முதல்வராக பணியாற்றினார். ஆனால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக, கடந்த மாதம், மாணவியர், பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை, சஸ்பெண்ட் செய்து, கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டது.இந்நிலையில் சேலத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, முதல்வர் பாலாஜி, 2023 அக்டோபரில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, கமிஷனர் விஜயகுமாரியிடம் புகார் அளித்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி உதவி கமிஷனர் ராமமூர்த்தி விசாரித்து அறிக்கை அளித்தார். அதன்படி பாலாஜி மீது டவுன் மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடுகின்றனர்.