தேர்தல் பணிக்கு சலுகை ஆசிரியர் சங்கம் நன்றி
சிவகங்கை: பெண் ஆசிரியர்களை சொந்த சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதித்த கலெக்டர் ஆஷா அஜித்திற்கு ஆசிரியர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.தேர்தலின் போது தொகுதி மாற்றி பணி அளிப்பதால், ஆசிரியர்கள் நீண்ட துாரம் செல்ல வேண்டி உள்ளது. அந்தந்த பகுதியிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும். தேர்தலுக்கு முதல் நாள் ஓட்டுச்சாவடி பணி உத்தரவு வழங்குவதால், ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடியை கண்டறிந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஓட்டுப்பதிவு நாளான்று ஓட்டுச்சாவடி சென்று இரவில் வீடு திரும்புவதில் சிக்கல் உள்ளது.எனவே மண்டல அலுவலர்களே ஆசிரியர்களை அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த சட்டசபை தொகுதிக்குள்ளேயே பெண் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.தேர்தல் பணியாற்ற முடியாத பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் கோரிக்கை வைத்தனர். பெண் ஆசிரியர்கள் 98 சதவீதம் பேரை அதே சட்டசபை தொகுதியில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினர்.