உலக புத்தக விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி
ஊட்டி : ஊட்டி மாவட்ட மைய நுாலகத்தில், தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை,- நீலகிரி மாவட்ட நுாலக ஆணை குழு மற்றும் வாசகர் வட்டம் சார்பில், உலக புத்தகத்தின் விழா கொண்டாடப்பட்டது.காலை, 9:30 மணிமுதல் மாலை, 5:00 மணிவரை நடந்த நிகழ்ச்சியில், 'மாணவர்களின் வெற்றியில் பெரிதும் பங்கு வகிப்பவர்கள், சமுதாயம், மாணவர்கள், பெற்றோர்' என்ற தலைப்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, வாசிப்பை நேசிப்போம் சுவாசிப்போம் என்ற தலைப்பில், விவாதமும் இடம்பெற்றது. இதில், திரளான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.