வெளிநாடு பணிகளுக்கு செல்வோர் எச்சரிக்கையோடு இருக்க அறிவுரை
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தகவல் தொழில்நுட்ப பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் இருந்து கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் நாடுகளுக்கு இளைஞர்கள் பலர் தகவல் தொழில்நுட்ப பணி என முகவர்கள் மூலம் சுற்றுலா விசாவில் அழைத்துசெல்லப்பட்டு சட்டவிரோத இணையதள நடவடிக்கையில் ஈடுபடகட்டாயப்படுத்தப்பட்டு நாடு திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.வெளிநாட்டு வேலைக்கான விசாவின் உண்மைதன்மை, பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன் பணிபுரிய செல்லும் நாட்டிலுள்ள இந்தியதூதரகம், இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். லாவோஸ், கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் இந்திய தூதரகம் தொலைபேசி எண் 8560--2055536568, மின்னஞ்சல்cons.vientiannemea.gov.in,கம்போடியா இந்திய தூதரகம் மின்னஞ்சல்cons.phnompehhmea.gov.in,visa.phnompehhmea.gov.inஆகியவை மூலம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் அரசின் அயலகத் தமிழர் நலத்துறை 18003093793, சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலர் உதவி எண் 90421 49222 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம், என்றார்.