ஆத்துார் அரசு கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு
ஆத்துார்: ஆத்துார் அரசு கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று நடக்கிறதுஆத்துார் அருகே, வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி முதல்வர் சுமதி வெளியிட்டுள்ள அறிக்கை:ஆத்துார், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான, சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு வரும் (இன்று) 29ல், காலை, 9:00 மணியளவில் நடக்கிறது.கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் உண்மை சான்று, நகல் மூன்று பிரதிகள், புகைப்படம் ஐந்து கொண்டுவர வேண்டும். மாணவர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, ஜாதி சான்று, மாற்றுச்சான்று, இணைய தளத்தில் விண்ணப்பம் செய்த படிவம், ஆதார், மாணவர்களது வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம், கல்லுாரி கட்டணம், 4,000 ரூபாய் கொண்டு வரவேண்டும்.கல்லுாரி சேர்க்கை கட்டணம், அதே நாளில் கல்லுாரி அலுவலகத்தில் கட்ட வேண்டும். கலந்தாய்வுக்கு தங்களது பெற்றோருடன் வரவேண்டும். மேலும் தகவலுக்கு, www.aagacattur.org.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.