இளநிலை படிப்புகளில் நாளை வரை சேரலாம்
புதுச்சேரி: நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சீட்டு ஒதுக்கப்பட்ட மாணவர்கள், கல்லுாரிகளில் சேர தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் முதல் சுற்று கலந்தாய்வு மூலம் சீட்டு ஒதுக்கப்பட்ட மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் ஜூலை 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் முதல் சுற்றில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதற்கான தேதி நாளை (18ம் தேதி) மாலை 5:00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்டாக் கன்வீனர் தெரிவித்துள்ளார்.