தேர்வார்களா ஆசிரியர்கள்? பள்ளிக்கல்வி துறை கிடுக்கி
சென்னை: உயர்கல்விக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு, இன்றும், நாளையும் மதிப்பீட்டு தேர்வை பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிக்க, பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.இதற்காக, பிளஸ் 2 மாணவர்கள் எந்த உயர்கல்வியில் சேர விரும்புகின்றனர்; அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வமும், கற்றல் திறனும் உள்ளது என்பதை அறிய, மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, ஒரு வாரமாக பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டப்போகும் ஆசிரியர்கள் தகுதியானவர்கள் தானா என கண்டறிய, இன்றும், நாளையும் அவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வை, பள்ளிக்கல்வித் துறை நடத்துகிறது.இந்த தேர்வில், அரசு பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறுபவர்களே மாணவர்களுக்கு வழிகாட்டுவர்.